உள்ளடக்கத்துக்குச் செல்

ஹன்சிகா மோட்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹன்சிகா மோட்வானி

இயற் பெயர் அன்சிக்கா பிரதீப் மொட்வானி
பிறப்பு ஆகத்து 9, 1991 (1991-08-09) (அகவை 33)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
வேறு பெயர் சீமா மொட்வானி
தொழில் நடிகை, வடிவழகி
நடிப்புக் காலம் 2001-இன்று வரை
இணையத்தளம் http://www.hannsikaa.net/

ஹன்சிகா மோட்வானி (ஆங்கில மொழி: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஓர் இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.[1] ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் பன்னாட்டுப் பள்ளியில் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு சன்யாசியின் மேல் காதல் கொள்வதைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.[2]

பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக ஆப் கா சரூர் - த ரியல் லவ் ஸ்டோரி யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது, இத்திரைப்படம் இடைப்பட்ட வெற்றியைக் கொடுத்தது. இதன் பின்னர் ஹீ: த ஒன்லி ஒன் எனத் தலைப்பிடப்பட்ட இந்தித் திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டிருந்தார்,[3] இப்படம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 15 பிப்ரவரி 2008 அன்று வெளியானது, இது ஹன்சிகா இதுவரை நடித்த ஒரேயொரு கன்னடத் திரைப்படமாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது. மேலும் மஸ்கா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் ராமுடன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்பட விவரங்கள்

[தொகு]
திரைப்படம்
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் கன்சா இந்தி குழந்தை நட்சத்திரம்
2003 ஹவா சஞ்சனாவின் மகள் இந்தி குழந்தை நட்சத்திரம்
2003 கோயி...மில் கயா பிரியா சிக்ஸ் இந்தி குழந்தை நட்சத்திரம்
2003 ஆப்ரா கா டாப்ரா பிங்கி இந்தி குழந்தை நட்சத்திரம்
2004 ஜாகோ சுருதி இந்தி குழந்தை நட்சத்திரம்
2004 ஹம் கோன் ஹே சாரா வில்லியம்ஸ் இந்தி குழந்தை நட்சத்திரம்
2007 தேசமுதுரு வைசாலி தெலுங்கு வெற்றியாளர் , ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி (தெற்கு)
2007 ஆப் கா சரூர் ரியா இந்தி பரிந்துரைக்கப்பட்டார், ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி விருது
2008 பிந்தாஸ் பிரீத்தி கன்னடம்
2008 கந்திரி வரலக்‌ஷ்மி தெலுங்கு
2008 மனி ஹே தோ ஹனி ஹே ஆஷிமா கபூர் இந்தி
2009 மஸ்கா மீனு தெலுங்கு
2009 பில்லா பிரியா தெலுங்கு கௌரவத் தோற்றம்
2009 ஜெயீபவா அஞ்சலி நரசிம்கா தெலுங்கு
2010 சீதாராமுல கல்யாணம் நந்தினி தெலுங்கு
2011 வேலாயுதம் வைதேகி தமிழ்
2011 மாப்பிள்ளை காயத்ரி தமிழ்
2011 எங்கேயும் காதல் கயல்விழி தமிழ்
2011 ஓ மை பிரண்ட் ரிடு தெலுங்கு
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி மீரா தமிழ்
2012 தேனிகைனா ரெடி ஷர்மிலா தெலுங்கு
2013 சேட்டை மதுமிதா தமிழ்
2013 வேட்டை மன்னன் தமிழ் படப்பிடிப்பில்
2013 சிங்கம் 2 சத்யா தமிழ்
2013 பிரியாணி பிரியங்கா தமிழ்
2013 தீயா வேலை செய்யணும் குமாரு சஞ்சனா தமிழ்
2014 மான் கராத்தே யாழினி தமிழ்
2014 அரண்மனை செல்வி தமிழ்
2015 ஆம்பள மாயா தமிழ்
2015 ரோமியோ ஜூலியட் ஐஸ்வர்யா தமிழ்
2015 வாலு பிரியா மகாலட்சுமி தமிழ்
2015 அரண்மனை 2 மாயா தமிழ்
2015 புலி மந்தாகினி தமிழ்
2015 இஞ்சி இடுப்பழகி அவரே தமிழ்
2015 சைஸ் சீரோ அவரே தெலுங்கு
2016 போக்கிரி ராஜா சுனிதா தமிழ்
2016 உயிரே உயிரே பிரியா தமிழ்
2016 மனிதன் பிரியா தமிழ்
2016 போகன் மகாலட்சுமி தமிழ்
2018 துப்பாக்கி முனை மைதிலி தமிழ்
2019 100 மேகா தமிழ்
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 கியான்கி சாஸ் பி கபி பாகு தி பாவ்ரி விரானி இந்தி
2003 தேஸ் மெய்ன் நிக்கிலா ஹோகா சந்த் டினா இந்தி
2003 கரிஷ்மா கா கரிஷ்மா இந்தி
2003 ஷாகலகா பூம் பூம் கருணா இந்தி
2004 ஹம் 2 ஹெயின் நா கரீனா / கோல் இந்தி
2004 சிராஸ் ஹனி இந்தி

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.bollywoodwiki.info/page/Hansika+Motwani
  2. "Hansika charges 50 lakhs!". Sify. பார்க்கப்பட்ட நாள் 26 November. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. "Hansika - The latest find". Rediff. பார்க்கப்பட்ட நாள் 26 November. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)

புற இணைப்புகள்

[தொகு]