உள்ளடக்கத்துக்குச் செல்

பழிவாங்குதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

பழிவாங்குதல் (Revenge) என்பது சட்டத்தை அல்லது சட்ட நடைமுறைகளை அல்லது சட்ட இயல் கோட்பாடுகளை மீறியவா்களுக்கு நீதி வழங்கும் நடைமுறைகளில் ஒன்றாகும். வழக்கமாக பழிவாங்குதல் என்பது, துன்பமடைந்தவா்களுக்காகவோ அல்லது அவ்வாறு நினைப்பவா்களுக்கோ துயா் துடைப்பதற்கு துன்பமளித்தவா் மீது எடுக்கப்படும் கடுஞ்செயல் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும். -மில்டன்[1]
  • ஒருவன் கேடு சூழ்ந்தால் அதைப் பொறுப்பதினும் பழிவாங்குதலே அதிகக் கஷ்டமான காரியம். -பிஷப் வில்ஸன்[1]
  • பழிவாங்குதல் என்னும் கடனைத் தீர்ப்பதில் அயோக்கியர்கள் யோக்கியர்களாயுமிருப்பார்கள், காலமும் தவறமாட்டார்கள். -கோல்ட்டன்[1]
  • பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை. -பேக்கன்[1]
  • பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும். - ஸெனீக்கா[1]
  • பழி வாங்குதல் என்பது அற்பர்கள் அற்ப ஆனந்தம் காணும் செயலே யாகும். -ஜூவெனல்[1]
  • பிறர் செய்த தீங்கைக் கொல்வதற்குள்ள ஆற்றல் பழி வாங்குதலுக்குள்ளதைவிட அலட்சியத்துக்கே அதிகம். - பெல்தாம்[1]
  • பழிவாங்கேன், அது எதிரிக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். மறவேன், அது எனக்குச் செய்யவேண்டிய கடமையாகும்.-கோல்ட்டன்[1]
  • பழி கூறாவண்ணம் வாழ்தலே தலைசிறந்த பழி வாங்குதலாகும். -ஹெர்பர்ட்[1]
  • பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம். -தாமஸ் புல்லர்[1]
  • சாதாரண மனிதர்கள் சிறு தீமைகளுக்குத்தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந் தீமைகளுக்குத் தகுந்தப்டி பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
  • பழி வாங்குதலுக்கு முன்யோசனை கிடையாது. -நெப்போலியன்[3]
  • பழி வாங்குவதால் ஒரு மனிதன் தன் எதிரிக்கு நிகராகி விடுகிறான். ஆனால், செய்யப்பெற்ற தீங்கை மறந்துவிட்டால், நீ மேலானவனாவாய். -பேக்கர்[3]
  • பழி வாங்குதல் வீரமன்று. ஆனால், பொறுப்பதே வீரம். ஷேக்ஸ்பியர்[3]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 264. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பழிவாங்குதல்&oldid=31704" இலிருந்து மீள்விக்கப்பட்டது