ஈசாக்கு
ஈசாக்கு | |
---|---|
ஈசாக்கு கிணறு வெட்டுதல், கற்பனை ஓவியம் (c. 1900) | |
தகவல் | |
குடும்பம் | |
துணைவர்(கள்) | ரெபேக்கா |
பிள்ளைகள் |
ஈசாக்கு என்பவர் விவிலியத்தின்படி, இஸ்ரயேலரின் முதுபெரும் தந்தையர் மூவரில் ஒருவராவார். இவர் ஆபிரகாம் மற்றும் சாராள் ஆகியோரின் மகனும் யாக்கோபுவின் தந்தையுமாவார். இவரது வரலாறு தொடக்கநூலில் கூறப்பட்டுள்ளது.
பெயர்
[தொகு]ஈசாக்கின் தாயான சாராள் தான் குழந்தையைப் பெறப்போவதாக இறைத்தூதர் ஆபிரகாமிடம் சொல்வதை கேட்டு தான் முதியவளாக இருந்தபடியால் நகைத்தார். இதனால் குழந்தையை பெற்றவுடன் நகைத்தல் எனப் பொருள்படும் வகையில் ஈசாக்கு என பெயரிட்டார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு விருத்த சேதனம் பண்ணினார்.[2] ஈசாக்கு பால்குடி மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார்.
சாராள், அபிரகாமுக்கு ஆகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான இஸ்மவேல் மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு ஆபிரகாமை வேண்டினார். கடவுளும் ஆபிரகாமுக்கு இதையே சொல்ல ஆபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.[3]
ஈசாக்கு வளர்ந்து சுமார் 25 ஆவது அகவையை அடைந்தபோது, கடவுள் அபிரகாமை சோதிக்கும் நோக்கில், ஈசாக்கை பலியிட கட்டளையிடுகிறார். ஆபிரகாம் கடவுள் காட்டிய இடத்துக்குச் சென்று ஈசாக்கை கட்டி பலியிட ஆயத்தமான போது, இறைத்தூதர் ஆபிரகாமை தடுத்தார்.[4]
ஈசாக்கின் 40ஆவது அகவையில் ஆபிரகாம் தனது சேவகரான எலியேசரை மொசபத்தேமியாவில் உள்ள தனது மைத்துனரான லாபான் வீட்டுக்கு அனுப்பி, ஈசாக்கு ஒரு மனைவியை தேடினார். ரெபேக்கா ஈசாக்கின் மனைவியாக அனுப்பப்பட்டார். ஈசாக்கு ரெபேக்காவை மணந்தார். சில காலம் குழந்தையற்றிருந்த ரெபேக்கா கர்பவதியாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார். அவர்களுக்கு ஏசா,யாக்கோபு என பெயரிட்டார். ஏசா ஈசாக்கின் ஆதரவையும் யாக்கோபு ரெபேக்காளின் ஆதரவையும் பெற்றனர்.
ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண் பார்வை மிகவும் குன்றிக் காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவரை அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.[5]
குடும்ப மரம்
[தொகு]தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[6] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||