உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா கினபாலு மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°58′13″N 116°04′14″E / 5.97028°N 116.07056°E / 5.97028; 116.07056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா கினபாலு மாவட்டம்
Kota Kinabalu District
சபா
கோத்தா கினபாலு மாநகராட்சி மன்றம்
கோத்தா கினபாலு மாவட்டம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கோத்தா கினபாலு மாவட்டம்
சின்னம்
கோத்தா கினபாலு மாவட்டம் is located in மலேசியா
கோத்தா கினபாலு மாவட்டம்
      கோத்தா கினபாலு
ஆள்கூறுகள்: 5°58′13″N 116°04′14″E / 5.97028°N 116.07056°E / 5.97028; 116.07056
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை
தலைநகரம்கோத்தா கினபாலு
அரசு
 • மாவட்ட அதிகாரிடத்தோ அசபின் சமீத்தா
(Datuk Dr. Sabin Samitah)
பரப்பளவு
 • மொத்தம்352 km2 (136 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்5,00,425
 • அடர்த்தி1,400/km2 (3,700/sq mi)
இணையதளம்dbkk.sabah.gov.my

கோத்தா கினபாலு மாவட்டம்; (மலாய்: Daerah Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா கினபாலு மாநகரம் (Kota Kinabalu City) ஆகும்.

கோத்தா கினபாலு மாவட்டம் 350 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது; 462,963 மக்கள் வசிக்கின்றனர். சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா கினபாலு மாவட்டமும் ஒன்றாகும்.

பொது

[தொகு]
சபா மாநிலத்தில் கோத்தா கினபாலு மாவட்டம்

சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

மக்கள்தொகை

[தொகு]

கடந்த 2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா கினபாலு மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 5,00,425. முக்கிய இனக்குழுக்கள் சீனர்கள் (20%), கடசான் - டூசுன் (Kadazan-Dusun) (15%), பஜாவ் (Bajaus) (16%), மலாய் (8%) மற்றும் மூருட் (Muruts) (6%).[1]

சபாவின் மற்ற மாவட்டங்களைப் போலவே, அருகிலுள்ள தெற்கு பிலிப்பீன்சு நாட்டில் இருந்தும்; முக்கியமாக சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago) மற்றும் பிலிப்பீன்சு மிண்டனாவோ (Mindanao) தீவில் இருந்தும்; கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உள்ளனர். அவர்களில் பலர் மக்கள்தொகை புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை.

வரலாறு

[தொகு]

1800-களில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company) (BNBC), வட போர்னியோ நிலப்பகுதிகளில் தன்னுடைய காலனிகளை உருவாக்கி வந்தது. 1882-இல், அந்த நிறுவனம் காயா விரிகுடாவில் (Gaya Bay) ஒரு சின்ன குடியிருப்பு பகுதியை உருவாக்கியது.

கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர் 'ஜெசல்டன்' (Jesselton). 1890-களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[1]

வடக்கு போர்னியோவின் முக்கிய வணிகத் தளம்

[தொகு]

அப்போது பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக (Vice-Chairman of BNBC) சர் சார்லசு ஜெசல் (Sir Charles Jessel) என்பவர் இருந்தார். அவருடைய பெயரே அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது. காலப்போக்கில் ஜெசல்டன், வடக்கு போர்னியோவின் முக்கிய வணிகத் தளமாக மாறியது.[2]

1899-ஆம் ஆன்டு இறுதி வாக்கில், ஜெசல்டன் நகரம், வடக்கு போர்னியோவின் முக்கிய வணிகத் தளமாக மாறியது. ரப்பர், ரோத்தான்கள், தேன், மெழுகு போன்ற முக்கிய பொருட்களின் பரிமாற்ற இடமாகவும் மாற்றம் கண்டது. புதிய இரயில் பாதையின் (North Borneo Railway) மூலமாகப் பெருநிலப்பகுதிகள் ஜெசல்டன் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டன.[3]

போர்னியோவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு

[தொகு]

1945-இல் நேச நாடுகள் கோத்தா கினபாலு மீது குண்டுவீசித் தாக்கியபோது, அந்த நகரம் மேலும் பேரழிவைச் சந்தித்தது. போர்னியோவை ஜப்பான் கையகப்படுத்திய பிறகு போர்னியோவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு தொடங்கியது. கோத்தா கினபாலுவிற்கு மீண்டும் அபி (Api) என மறுபெயரிடப்பட்டது.[4]

1942-ஆம் ஆண்டில், பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு (Japanese occupation of British Borneo) நடைபெற்றது. அந்தக் கட்டத்தில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, நேச நாடுகளின் வான் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக கோத்தா கினபாலு நகரத்தில் எஞ்சியிருந்த பகுதிகள் அழிக்கப்பட்டன. மூன்று கட்டிடங்கள் மட்டுமே எஞ்சின.

மலேசியா கூட்டமைப்பு

[தொகு]

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் ஜெசல்டனை மீண்டும் நிர்வாகம் செய்வதற்கு வடக்கு போர்னியோவிற்குத் திரும்பி வந்தது. ஆனால், புனரமைப்பு செய்வதற்கு பெரும் செலவுகள் ஏற்படும் என அறியப்பட்டது. அதன் காரணத்தினால் 18 சூலை 1946-இல் பிரித்தானிய முடியாட்சியிடம் வடக்கு போர்னியோவின் நிர்வாகக் கட்டுப்பாடு வழங்கப்பட்டது.[5]

1963-ஆம் ஆண்டு சரவாக், சிங்கப்பூர் மற்றும் மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) ஆகியவை இணைந்து மலேசியா கூட்டமைப்பு (Federation of Malaysia) எனும் ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் சபா எனும் பிரித்தானியக் குடியேற்ற நாடும் (Crown Colony of North Borneo) இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெசல்டன் நகரம், சபாவின் தலைநகரமாகவே இருந்தது.

22 டிசம்பர் 1967 அன்று, சபாவின் முதல்வர் முசுதபா அருண் (Mustapha Harun) என்பவரின் கீழ் இருந்த சபா மாநில சட்டமன்றம், ஜெசல்டன் நகரத்தை கோத்தா கினபாலு என மறுபெயரிடும் மசோதாவை நிறைவேற்றியது. 1967 டிசம்பர் 22-ஆம் தேதி, ஜெசல்டன் என்பது கோத்தா கினபாலு (Jesselton as Kota Kinabalu) என மாற்றம் கண்டது. 2000 பிப்ரவரி 2-ஆம் தேதி கோத்தா கினபாலு நகரம்; மாநகரம் எனும் நிலைக்கும் தகுதி உயர்த்தப்பட்டது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sabah the Early Days.
  2. Setelah Jesselton ditemui pada tahun 1899, BNBCC telahpun mula melakukan kerja-kerja untuk membangunkan Jesselton.
  3. Cecilia Leong (1982). Sabah, the first 100 years. Percetakan Nan Yang Muda. p. 24.
  4. Wong Seng Chow (10 March 2009). Rice Wine & Dancing Girls: The Real Life Drama of a Roving Cinema Manager in 50s Malaysia and Singapore. Monsoon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-08-1083-2. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
  5. Muzium Sabah (1992), Sabah's heritage : a brief introduction to Sabah's history and heritage, Sabah Museum, பார்க்கப்பட்ட நாள் 24 October 2013

மேலும் படிக்க

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மலேசியாவின் மாவட்டங்கள்

புற இணைப்புகள்

[தொகு]