தாவாவ் பிரிவு
தாவாவ் பிரிவு (மலாய் மொழி: Bahagian Tawau; ஆங்கிலம்: Tawau Division) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். பிரிவு என்பதைக் கிழக்கு மலேசியாவில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள். இந்த முறைமை தீபகற்ப மலேசியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.[1]
கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களைப் பொருத்த வரையில், பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் ஆளுநர் (Resident) நியமிக்கப்பட்டு உள்ளார்.
பொது
[தொகு]இந்தக் தாவாவ் பிரிவு, சபா மாநிலத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 14,905 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 20 %).[1]
தாவாவ் பிரிவின் தலைநகரம் தாவாவ். இதர முக்கிய நகரங்கள்: லகாட் டத்து (Lahad Datu), கூனாக் (Kunak) மற்றும் செம்பூர்ணா (Semporna).
சபாவின் மொத்த மக்கள் தொகையில் தவாவ் பிரிவு 26 % கொண்டுள்ளது. முக்கிய பழங்குடி குழுக்கள்: பஜாவ், சுலுக், இடான், திடோங், கோகோஸ், மூருட், லுன் பாவாங்; லுன் டாயே மற்றும் சிறுபான்மை கலப்பு இனக் குழுக்கள்.[2][3]
வெளிநாட்டவர் குடியேற்றம்
[தொகு]இந்தோனேசியாவில் இருந்து பூகினீஸ் மற்றும் துரோஜான் போன்ற இனக் குழுக்கள், பெரிய எண்ணிக்கையில், சட்டப் பூர்வமாகவும்; சட்டவிரோதமாகவும் குடியேறி உள்ளனர். கிழக்குத் திமோர் தீவில் இருந்தும் குடியேற்றங்கள் நடந்து உள்ளன. பிலிப்பைன்ஸில் இருந்து தாசுக் மற்றும் விசாயா மக்களும் குடியேறி உள்ளனர்.[4]
மேலும் மலேசியப் பாகிஸ்தானியர்கள்; மலேசிய இந்தியர்கள்; மலேசிய அரேபியர்கள், தாவாவ் பகுதியில் வாழ்கின்றனர்.[2] சீனர்களும் அதிகமாக உள்ளனர்.[3]
தாவாவ் துறைமுகம்
[தொகு]கோத்தா கினபாலு மற்றும் சண்டக்கான் துறைமுகங்களுக்குப் பிறகு மூன்றாவது பெரிய துறைமுகமாகத் தாவாவ் துறைமுகம் விளங்குகிறது. பெரிய அளவில் காட்டு மரங்கள் மற்றும் விவசாய பொருட்களின் ஏற்றுமதி மையமாகவும் தாவாவ் துறைமுகம் செயல்படுகிறது.[5]
தாவாவ் பிரிவில் இரண்டு உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. ஒன்று தாவாவ் வானூர்தி நிலையம் மற்றும் ஒன்று லகாட் டத்து வானூர்தி நிலையம். இந்தப் பிரிவில் சிபாடான் (Sipadan) தீவு; லிகிடான் (Ligitan) தீவு; செபாடிக் (Sebatik) தீவின் வடக்குப் பகுதியும் அடங்கும்.
வரலாறு
[தொகு]சபா, சரவாக் மாநிலங்களின் தற்போதைய பிரிவு எனும் அமைப்பு முறை ஜெர்மனிய வணிகர் ஒருவரின் மூலமாகப் பெறப்பட்ட அமைப்பு முறையாகும். அந்த அமைப்பு முறை வட போர்னியோ சார்ட்டட் நிறுவனத்திடம் (North Borneo Chartered Company) இருந்து பெறப்பட்டது.[6][7]
இந்த முறையை அமைத்தவர் பிரபு வான் ஓவர்பெக் (Baron von Overbeck). அவருக்குப் பின்னர் அந்த டிவிசன் முறை இன்றும் தொடர்கிறது.
மாநிலங்கள்
[தொகு]சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவு பின்வரும் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:[8]
- கலாபாக்கான் மாவட்டம் (3,885 கி.மீ.2 (கலாபாக்கான்)
- கூனாக் மாவட்டம் (1,134 கி.மீ.2) (கூனாக்)
- லகாட் டத்து மாவட்டம் (6,501 கி.மீ.2) (லகாட் டத்து)
- செம்பூர்ணா மாவட்டம் (1,145 கி.மீ.2) (செம்பூர்ணா)
- தாவாவ் மாவட்டம் (2,240 கி.மீ.2) (தாவாவ்)
1 சனவரி 2019-இல் தாவாவ் மாவட்டத்தில் இருந்து கலாபாக்கான் மாவட்டம் பிரிக்கப்பட்டது.[9]
இவற்றையும் பார்க்க
[தொகு]நூல்கள்
[தொகு]- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
- State of Sabah: Administrative Divisions Ordinance – Sabah Cap. 167 (PDF) of 1 November 1954; last amended on 16 September 1963, as amended in August 2010;
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "General Information". Lands and Surveys Department of Sabah. Borneo Trade. Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ 2.0 2.1 Victor T. King; Zawawi Ibrahim; Noor Hasharina Hassan (12 August 2016). Borneo Studies in History, Society and Culture. Springer Singapore. pp. 239–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-10-0672-2.
- ↑ 3.0 3.1 Peter Chay (1 January 1988). Sabah: the land below the wind. Foto Technik. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-9981-12-4.
- ↑ Geoffrey C. Gunn (18 December 2010). Historical Dictionary of East Timor. Scarecrow Press. pp. 71–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7518-0.
- ↑ Tamara Thiessen (5 January 2016). Borneo. Bradt Travel Guides. pp. 239–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-915-5.
- ↑ Encyclopædia Britannica 1992, ப. 278.
- ↑ The National Archives 1945, ப. 2.
- ↑ "Statistics Yearbook Sabah 2019". Department of Statistics, Malaysia. December 2020. p. 3. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "Pengenalan Kalabakan". Kalabakan District. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.