சிலிம் ரிவர்
ஆள்கூறுகள்: 3°49′51″N 101°24′14″E / 3.83083°N 101.40389°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1800 |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | ஏறக்குறைய 1,00,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | https://ptg.perak.gov.my/portal/web/muallim |
சிலிம் ரிவர் (Slim River) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களை இணைக்கும், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 105 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் சிலிம் ரிவர் நகரம் அமைந்து உள்ளது.
இந்த நகரத்திற்கு அருகில் ஒரு நதி ஓடுகிறது. அதற்கு சுங்கை சிலிம் என்று பெயர். சுங்கை என்ற சொல்லுக்கு மலாய் மொழியில் நதி என்று பொருள். இந்த நதிக்கு உண்மையில் 19-ஆம் நூற்றாண்டில் ஓர் ஆங்கில இராணுவ அதிகாரி வில்லியம் சிலிம் (William Slim) என்பவரின் பெயர் சூட்டப்பட்டது.
வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப் போரின்போது மலாயாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி படை எடுத்து வந்த சப்பானிய இராணுவப் படைகளுக்கும்; இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியக் கூட்டுப் படைகளுக்கும் இடையே ஒரு போர் மையத் தளமாக இந்த நகரம் விளங்கியது. சிலிம் ரிவர் போர் என்று பெயர்.[1]
சிலிம் ரிவர் போரில் சப்பானிய படைகள் இராணுவ டாங்கிகளைப் பயன்படுத்தினர். அதனால் பிரித்தானியக் கூட்டுப் படை பலம் இழந்தது. சப்பானியர்களிடம் தோல்வி அடைந்தது. தவிர ஜப்பானியர்களிடம் விமானப் படையின் மேலாண்மை இருந்தது.[2]
சிலிம் ரிவர் போரில் பிரித்தானியக் கூட்டுப் படையினர் தோல்வி அடைந்தனர். அவர்கள் பலத்த உயிரிழப்புகளையும் சந்திக்க வேண்டி வந்தது. மேலும் அவர்களின் பல பிரிவுகள் பின்வாங்குவதில் இருந்தும் துண்டிக்கப் பட்டன. மலாயாவைக் காப்பாற்ற முடியும் எனும் பிரித்தானியக் கூட்டுப் படை நம்பிக்கையை இந்தப் போர் முடிவுக்கு கொண்டு வந்தது.[3]
பொருளியல்
[தொகு]சிலிம் ரிவர் பொதுவாக செம்பனை மற்றும் ரப்பர் தோட்ட விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அவையே அதன் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள். வாகன இயந்திரப் பாகங்களை விற்கும் சில கடைகள் உள்ளன. தஞ்சோங் மாலிமில் புதிதாகப் புரோட்டோன் சிட்டி எனும் வாகனத் தயாரிப்பு நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தப் புதிய நகரத்திற்கு அருகாமையில் சிலிம் ரிவர் இருப்பதால் வாகன இயந்திரப் பாகங்களை விற்கும் கடைககளும் தோன்றி உள்ளன.
தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி (SJKT Slim River); மொத்த மாணவர்கள் 169. ஆசிரியர்கள் 27.[4][5]
சிலிம் வில்லேச் தமிழ்ப்பள்ளி (SJKT Slim Village); மொத்த மாணவர்கள் 37. ஆசிரியர்கள் 10.[6]
குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Cluny). இந்தப் பள்ளி மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smith, Colin (2006). Singapore Burning. Great Britain: Penguin Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-101036-6.
- ↑ Warren, Alan (2006). Britain's Greatest Defeat: Singapore 1942 (Illustrated ed.). Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85285-597-5.
- ↑ Taylor, Ron. "Slim River". FEPOW-Community. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022". Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022. Kementerian Pendidikan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023.
- ↑ சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி.
- ↑ சிலிம் வில்லேஸ் தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா.
- ↑ பேராங் ரிவர் மற்றும் குளுனி தோட்டத் தமிழ்ப் பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே பதிந்துள்ளது எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் நிலை குறித்து மிகவும் சிந்திக்க வைக்கிறது (23 டிசம்பர் 2019).