உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிட் புந்தார் (P057)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Parit Buntar (P057)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி

(P57 Parit Buntar )
மாவட்டம்கிரியான் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை68,502 (2022)[1]
வாக்காளர் தொகுதிபாரிட் புந்தார் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்பாரிட் புந்தார், நிபோங் திபால், கோலா குராவ், பாகன் செராய், செமாங்கோல், அலோர் பொங்சு, கிரியான் ஆறு
பரப்பளவு145 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்மிசுபாகுல் முனீர் மசுக்கி
(Mohd Misbahul Munir Masduki)
மக்கள் தொகை73,366 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (69.0%)
  சீனர் (25.9%)
  இதர இனத்தவர் (0.1%)

பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Parit Buntar; ஆங்கிலம்: Parit Buntar Federal Constituency; சீனம்: 巴里文打国会议席) என்பது மலேசியா, பேராக், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P057) ஆகும்.[6]

பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பாரிட் புந்தார்

[தொகு]

பாரிட் புந்தார் சுற்றுப்புறப் பகுதிகளில் பெருமளவில் நெல் வயல்கள் உள்ளன. அதன் காரணமாக இந்த மாவட்டம் பேராக் மாநிலத்தின் அரிசிக் களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது. பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால்; மற்றும் கெடா மாநிலத்தின் பண்டார் பாரு ஆகிய நகரப் பகுதிகளுடன் எல்லையாகக் கொண்டது.

சுங்கை ஆச்சே, பாகன் தியாங், தஞ்சோங் பியாண்டாங், கோலா குராவ் போன்ற இடங்களில் மீன்பிடித் தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பாரிட் புந்தார் நகர வளாகம் (Parit Buntar City Center); வணிகத்திற்கும் தொழில்துறைக்கும் முதன்மை வகிக்கின்றது.

கிரியான் மாவட்டம்

[தொகு]

பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியை உள்ளடக்கியது. இதன் வடக்கே பினாங்கு; கெடா மாநிலங்கள் உள்ளன. முக்கிய நகரம் பாரிட் புந்தார். கிரியான் மாவட்டம் 8 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவையாவன:

பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி

[தொகு]
பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கிரியான் லாருட் மக்களவைத் தொகுதியில் இருந்து
பாரிட் புந்தா தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P046 1974–1978 சுலைமான் தாயிப்
(Sulaiman Taib)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982 இட்ரிஸ் அப்துல் ரவுப்
(Idris Abdul Rauf)
6-ஆவது மக்களவை 1982–1986 அப்துல் ரகுமான் சுலைமான்
(Abdul Rahman Suliman)
7-ஆவது மக்களவை P051 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P054 1995–1999 அப்துல் ரகுமான் சுலைமான்
(Abdul Rahman Sulaiman)
10-ஆவது மக்களவை 1999–2004 Hasan Mohamed Ali
(Hasan Mohamed Ali)
மாற்று பாரிசான்
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை P057 2004–2008 அப்துல் அமீது சைனல் அபிதீன்
(Abdul Hamid Zainal Abidin)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 முஜாகித் யூசோப் ராவா
(Mujahid Yusof Rawa)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2015
2015–2018 அமாணா
14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான் அரப்பான்
(அமாணா)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் மிசுபாகுல் முனீர் மசுக்கி
(Misbahul Munir Masduki)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

பாரிட் புந்தார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
68,502
வாக்களித்தவர்கள்
(Turnout)
53,596 77.23% - 6.35%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
52,903 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
101
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
592
பெரும்பான்மை
(Majority)
5,395 10.20% Increase + 2.95
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[7]

பாரிட் புந்தார் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
மிசுபாகுல் முனீர் மசுக்கி
(Mohd Misbahul Munir Masduki)
பெரிக்காத்தான் 52,903 23,223 43.90% + 43.90% Increase
முஜாகித் யூசோப் ராவா
(Mujahid Yusof Rawa)
பாக்காத்தான் - 17,828 33.70% - 5.52%
இம்ரான் முகமது யூசோப்
(Imran Mohd Yusof)
பாரிசான் - 11,593 21.91% - 10.05 %
ரோகிசாஸ் சரீப்
(Rohijas Md Sharif)
பெஜுவாங் - 259 0.49% + 0.49% Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]