சீகர் மாவட்டம்
74°26′N 75°15′E / 74.44°N 75.25°E - 27°13′N 28°07′E / 27.21°N 28.12°E
சீகர் மாவட்டம் மாவட்டம் सीकर जिला | |
---|---|
சீகர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு இராஜஸ்தான் | |
74°26′N 75°15′E / 74.44°N 75.25°E - 27°13′N 28°07′E / 27.21°N 28.12°E | |
மாநிலம் | இராஜஸ்தான், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜெய்ப்பூர் |
தலைமையகம் | சிகர் |
பரப்பு | 7,742.44 km2 (2,989.37 sq mi) |
மக்கட்தொகை | 2,677,333[1] (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 346/km2 (900/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 633,300 |
படிப்பறிவு | 71.91 |
பாலின விகிதம் | 947 |
வட்டங்கள் | 9 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 8 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 11 மாநில நெடுஞ்சாலை எண் 8 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 459.8 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சீகர் மாவட்டம் (Sikar district) (இந்தி:सीकर जिला) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சிகர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜெய்ப்பூர் கோட்டத்தில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் செகாவதி பிரதேசத்தில் அமைந்துள்ள சீகர் மாவட்டத்தின் வடக்கில் சுன்சுனூ மாவட்டம், வடமேற்கில் சூரூ மாவட்டம், தென்மேற்கில் ஜெய்ப்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. சீகர் மாவட்டப் பகுதியின் பழைய பெயர் வீர் பான் கா பாஸ் ஆகும் (Veer Bhan Ka Bas).
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சீகர் மாவட்டம் சீக்கர், பதேப்பூர், லட்சுமன்காட், தந்தராம்காட், ஸ்ரீ மாதோப்பூர், நீம்-கா-தானா, கண்டேலா, தோத், ராம்காட் செக்காவதி என ஒன்பது வருவாய் வட்டங்களையும்; தோத், பிப்ராலி, பதேப்பூர், லட்சுமன்காட், தண்டராம்காட், ஸ்ரீமாதோப்பூர், கண்டேலா, நீம் கா தானா, மற்றும் படான் என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களையும்; 1183 கிராமங்களையும்; 342 கிராமப் பஞ்சாயத்துக்களையும்; ஒரு நகரப் பஞ்சாயத்தையும்; எட்டு நகராட்சி மன்றங்ககளையும் கொண்டுள்ளது.
அரசியல்
[தொகு]சீகர் மாவட்டம் சீக்கர், பதேப்பூர், லட்சுமன்காட், தந்தராம்காட், ஸ்ரீ மாதேப்பூர், நீம்-கா-தானா, கண்டேலா மற்றும் தோட் என எட்டு சட்டமன்ற தொகுதிகளையும்;[2] மேலும் சீகர் எனும் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.[3]
நெடுஞ்சாலைகள்
[தொகு]ஜெய்சல்மேர் - ஆக்ராவை இணைக்கும் 485 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை 11 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 8 இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சீகர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,677,333 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 76.32% மக்களும்; நகரப்புறங்களில் 23.68% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.03% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,374,990 ஆண்களும்; 1,302,343 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 848 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 7,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 346 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 71.91% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 58.23% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 379,874 ஆக உள்ளது. [4]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,342,076 (87.48 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 327,583 (12.24 %) ஆகவும்; சமண சமய, சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Name Census 2011, Rajasthan data" (PDF). censusindia.gov.in. 2012. பார்க்கப்பட்ட நாள் 28 Feb 2012.
- ↑ "Assembly Constituencies of Sikar district" (PDF). gisserver1.nic.in/. 2012. Archived from the original (PDF) on மார்ச் 8, 2014. பார்க்கப்பட்ட நாள் February 28, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Parliamentary Constituencies of Rajasthan" (PDF). 164.100.9.199/home.html. 2012. Archived from the original (PDF) on 16 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 Feb 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sikar District : Census 2011 data
வெளி இணைப்புகள்
[தொகு]- Photo gallery of Sikar பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்
- Amenities Sikar பரணிடப்பட்டது 2016-04-24 at the வந்தவழி இயந்திரம்