சுங்கை ஊஜோங்
சுங்கை ஊஜோங் | |
---|---|
Sungai Ujong | |
பாரம்பரிய ஆட்சி | |
ஆள்கூறுகள்: 2°42′N 102°10′E / 2.700°N 102.167°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
சுங்கை ஊஜோங் (ஆங்கிலம்: Sungai Ujong; மலாய்: Sungai Ujong) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரம்பரிய ஆட்சியைக் கொண்ட ஒரு மாவட்டம் ஆகும். வரலாற்றின் பின்னணியில் நெடும் காலமாக, சுங்கை ஊஜோங், நெகிரி செம்பிலான் மாநிலத்தில், ஒரு மாநிலமாகவே கருதப்பட்டு வந்தது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், அது ஒரு தனி அரசாங்கமாகவும் இயங்கி வந்தது. சுங்கை ஊஜோங் மிகப் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.
பொது
[தொகு]1760-ஆம் ஆண்டுகளில் இருந்து, 11 ஆளுநர்கள் அந்த மாவட்டத்தை ஆட்சி செய்து உள்ளனர். அந்த ஆளுநர்களை உண்டாங் (Undang) என்று அழைப்பார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நான்கு உண்டாங்குகள் இருக்கின்றனர். இந்த நால்வரில் ஓர் உண்டாங்தான், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுல்தானாக தேர்வு செய்யப்பட்டு ஆட்சி செய்வார்.
இந்த மாநிலத்தின் தலைவரைச் சுல்தான் என்று அழைப்பது இல்லை. அவரை யாம் துவான் பெசார் அல்லது யாங்-டி-பெர்த்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைப்பார்கள். டத்தோ கிளானா பெட்ரா ஸ்ரீ ஜெயா எனும் ஆளுமைப் பெயர், 1769ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானிடம் இருந்து கிடைக்கப் பெற்றதாகும்.
முன்பு, நெகிரி செம்பிலான் மாநிலத்தை, சுங்கை ஊஜோங் என்று அழைத்தார்கள்.
ஆட்சியாளர் தேர்வு முறை
[தொகு]நெகிரி செம்பிலானில் அதன் சுல்தான் எனும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உள்ள மாவட்டத் தலைவர்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர். மாவட்டத் தலைவர்களை உண்டாங் என்று அழைக்கின்றனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு லுவாக் உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு லுவாக் உண்டாங்குகள்:
- சுங்கை ஊஜோங் உண்டாங்
- ஜெலுபு உண்டாங்
- ஜொகூல் உண்டாங்
- ரெம்பாவ் உண்டாங்
ஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.