செம்போல் நகரம்
செம்போல் நகரம் (பண்டார் ஜெம்போல்) | |
---|---|
Bandar Seri Jempol | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°54′41.71″N 102°23′28.6″E / 2.9115861°N 102.391278°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | செம்போல் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 72120[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06458 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
செம்போல் நகரம் அல்லது பண்டார் ஜெம்போல் (மலாய்; ஆங்கிலம்: Bandar Seri Jempol; சீனம்: 斯里仁保镇) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம். இந்த நகரம் 1980-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும்.[2]
இந்த நகரத்தின் பழைய பெயர் செர்த்திங் (Serting). அதிகாரப்பூர்வமாக பண்டார் ஜெம்போல் என்று இந்த நகரம் அழைக்கப்பட்டாலும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் செர்த்திங் என்றே அழைக்கின்றனர்.
பொது
[தொகு]செம்போல் மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்களில் செம்போல் நகரமும் ஒன்றாகும். மற்றொரு முக்கியமான நகரம் பகாவ்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகரம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
போக்குவரத்து
[தொகு]- நெடுஞ்சாலை (Malaysia Federal Route 10); செம்போல் நகரத்திற்கான முக்கிய சாலையாகும். இந்தச் சாலை பகாவ் நகரத்தின் வழியாக செம்போல் நகரத்தை அடைந்து பின்னர் பகாங் தெமர்லோ நகரத்தை அடைகிறது.
- பெரா நெடுஞ்சாலை (Bera Highway) ; செம்போல் பகுதியைக் கிழக்கு - மேற்குத் திசையாக வெட்டிச் செல்கிறது. இந்தச் சாலை செம்போல் நகரில் தொடங்கி, பின்னர் தெற்கு பகாங்கில் உள்ள பண்டார் துன் அப்துல் ரசாக் நகரத்திற்கு அருகே முடிவு அடைகிறது.
- நெடுஞ்சாலை (Malaysia Federal Route 13); கோலா பிலா தொகுதியில் பகாவ் நகரத்தையும் சுவாசே நகரத்தையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலைவழியாக செம்போல் நகரத்தை அடையலாம்.
- பகாவ் தொடருந்து நிலையம் தான், இந்த செம்போல் நகரத்திற்கும் செம்போல் மாவட்டத்திற்கும் சேவை செய்யும் முதன்மை தொடருந்து நிலையம் ஆகும்.
செம்போல் தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டத்தின் செம்போல் நகரச் சுற்றுவட்டாரப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 176 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்: [3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD6002 | ஆயர் ஈத்தாம் தோட்டம் | SJK(T) Ladang Air Hitam[4][5] | ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 91 | 14 |
NBD6003 | கெடிஸ் தோட்டம் | SJK(T/Te) Ladang Geddes | கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 85 | 14 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bandar Seri Jempol, Negeri Sembilan". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
- ↑ Volunteers, Author Museum (3 June 2023). "Jempol was declared a district on 1 January 1980. Then on 29 January 2019, the status was upgraded to a municipal council, the fourth municipal council in Negeri Sembilan". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
{{cite web}}
:|first1=
has generic name (help) - ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
- ↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.