ஜெத்பூர்
ஜெத்பூர்
ஜெத்பூர், நவகாட் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜெத்பூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 21°45′15″N 70°37′20″E / 21.75417°N 70.62222°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | ராஜ்கோட் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஜெத்பூர்-நவகாட் நகராட்சி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 36 km2 (14 sq mi) |
ஏற்றம் | 184 m (604 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 1,18,302 |
• அடர்த்தி | 3,300/km2 (8,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி மொழி, இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞசல் சுட்டு எண் | 360370 |
தொலைபேசி குறியீடு | (02823) |
வாகனப் பதிவு | GJ-3 |
பாலின விகிதம் | 1:1 |
மக்களவைத் தொகுதி | போர்பந்தர் |
இணையதளம் | http://www.jetpurnagarpalika.org/ |
ஜெத்பூர் (Jetpur, Navagadh), இந்தியாவின் மேற்கே அமைந்த குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும். சௌராட்டிரா தீபகற்பத்தில் பாயும் பாதர் ஆற்றின் கரையில் அமைந்த ஜெத்பூர் நகரம், ராஜ்கோட் நகரத்திற்கு தெற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, ஜெத்பூர்-நவகாட் நகராட்சியின் மக்கள் தொகை 118,302 ஆகும். அதில் ஆண்கள் 62,174 மற்றும் பெண்கள் 56,128 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,454 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.12% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.63%, இசுலாமியர் 14.48%, சமணர்கள் 0.55 % மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[2]
பொருளாதாரம்
[தொகு]ஜெத்பூர் நகரத்தில் பந்தானி வகை அச்சு கைத்தறி சேலைகள் மற்றும் கங்கா எனும் ஆப்பிரிக்க மக்கள் உடுத்தும் வண்ணப்பூக்கள் அச்சிடப்பட்ட பருத்தித் துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.[3][4]
போக்குவரத்து
[தொகு]ஜெத்பூர் நகரம் சாலை வழியாக ராஜ்கோட், ஜூனாகத் நகரங்களுடன் இணைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Municipalities of Rajkot District
- ↑ Jetpur Navagadh City Population 2011
- ↑ "Gujarat Tourism--Attractions". gujarattourism.com. Archived from the original on 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.