உள்ளடக்கத்துக்குச் செல்

போர்பந்தர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌராஷ்டிர தீபகற்ப மாவட்டங்கள், குஜராத் மாநிலம்
மகாத்மா காந்தி உருவத்துடன் அமைக்கப்பட்டுள்ள
கீதா ஆலயம் (மந்திர்), போர்பந்தர்
15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு மாவட்டங்களுடன் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

போர்பந்தர் மாவட்டம் (Porbandar district) (குசராத்தி: પોરબંદર જિલ્લો) மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகம் போர்பந்தர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,298 km² ஆகும். மக்கட்தொகை 5,86,062 . 48.77% மக்கள் நகர்புறத்தில் வாழ்கின்றனர்.[1] வடக்கில் ஜாம்நகர் மாவட்டம் மற்றும் தேவபூமி துவாரகை மாவட்டம், கிழக்கில் ஜூனாகாத் மாவட்டம் மற்றும் ராஜ்கோட் மாவட்டம், மேற்கிலும் தெற்கிலும் அரபுக்கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது போர்பந்தர் மாவட்டம்

வரலாறு

[தொகு]

மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த மாவட்டம் போர்பந்தர். கிருஷ்ணரின் பள்ளிப்பருவ நண்பர் குசேலர் பிறந்த மாவட்டம் போர்பந்தர் என மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

போர்பந்தர் மாவட்டம் மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. போர்பந்தர்
  2. ரணவாவ்
  3. குடியானா

வேளாண்மை

[தொகு]

பருத்தி, நிலக்கடலை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் முதலியன பயிரிடப்படுகின்றன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கட்தொகை 586,062ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 255ஆக உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்ற அளவில் உள்ளது. கல்வி அறிவு 76.63%ஆக உள்ளது.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]
  • விமான நிலையம்: போர்பந்தர் விமான நிலையம் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
  • தொடருந்து வண்டி: போர்பந்தர் தொடருந்து சந்திப்பு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது.
  • சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்: தேசிய நெடுஞ்சாலை எண். 8பி போர்பந்தரை ராஜ்கோட்டுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census India Map". Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-15.

வெளி இணைப்புகள்

[தொகு]