பெர்கமோன் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | 1930 |
---|---|
அமைவிடம் | பெர்கமோன் அருங்காட்சியகம் 10117, அருங்காட்சியகத் தீவு, பெர்லின், ஜெர்மனி |
ஆள்கூற்று | 52°31′15″N 13°23′47″E / 52.5209°N 13.3964°E |
வகை | கலை மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் |
வருனர்களின் எண்ணிக்கை | 1.1 மில்லியன் (2007)
|
பொது போக்குவரத்து அணுகல் | பிரடெரிக் ஸ்டிராபே |
வலைத்தளம் | Website |
பெர்கமோன் அருங்காட்சியகம் (Pergamon Museum) (இடாய்ச்சு மொழி: Pergamonmuseum) ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தின் அருங்காட்சியகத் தீவில் அமைந்த பண்டைய கலை மற்றும் வரலாற்றுத் தொல்பொருட்களின் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் 1930-இல் துவக்கப்பட்டது.[1]
இவ்வருங்காட்சியகத்தில் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான பாபிலோன், உரூக், அசூர், பண்டைய எகிப்து, நினிவே நகரங்களில் அகழ்வாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்களில் புகழ்பெற்றவைகள் , கிமு 575 ஆண்டில் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில், பாபிலோனின் சிங்கம், சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட சுமேரிய மொழியில் கிமு 2100-இல் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியம், அனதோலியாவின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் மெலிட்டஸ் வணிக வளாகத்தின் நுழைவாயில் மற்றும் உதுமானியப் பேரரசின் சத்தா அரண்மனை முகப்பு ஆகும்.
அருங்காட்சியகத்தின் தொல் நினைவுச்சின்னங்கள்
[தொகு]-
சீரமைக்கப்பட்ட இஷ்தர் கோயில் நுழைவாயில்
-
அலெப்போ அறை
-
பண்டைய எகிப்திய பார்வோன் அசார்ஹத்தோனின் சிற்பம், ஆண்டு கிமு 671
-
கிமு 2100-இல் களிமண் பலகையில் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி
-
உரூக் நகரத்தின் தூண் சிற்பம்
-
உரூக் நகர இஷ்தர் கோயிலின் ஆண் தெய்வம், கிமு 1500
-
உரூக் நகர இஷ்தர் கோயிலின் பெண் தெய்வம், கிமு 1500
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Haase, Claus-Peter (2007), A Collector's Fortune: Islamic Art from the Collection of Edmund de Unger, Hirmer Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7774-4085-9, distributed by Chicago University Press
- Bilsel, Can (2012), Antiquity on Display: Regimes of the Authentic in Berlin's Pergamon Museum, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-1995-7055-3