உள்ளடக்கத்துக்குச் செல்

மக்களவைத் துணைத்தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்களவைத் துணைத்தலைவர்
Lok Sabhā ke Upādhyakṣa
தற்போது
காலியிடம்

23 சூன் 2019 முதல்
பதவிதுணைத் தலைவர்
உறுப்பினர்மக்களவை
அறிக்கைகள்
நியமிப்பவர்மாநிலங்களவை உறுப்பினர்கள்
உருவாக்கம்30 மே 1952; 72 ஆண்டுகள் முன்னர் (1952-05-30)
முதலாமவர்ம. அ. அய்யங்கர்

மக்களவைத் துணைத்தலைவர் ( IAST : Lok Sabhā Upādhyakṣa) என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையின் இரண்டாவது மிக உயர்ந்த பேரவை அலுவலர் ஆவார். இந்திய மக்களவைத் தலைவர் மரணம் அல்லது உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு அல்லது சபையில் இல்லாவிட்டால் சபைக்குத் தலைமை தாங்கிச் செயல்படுவார். இந்தியாவில் மரபுப்படி எதிர்க்கட்சிக்குத் துணைத்தலைவர் பதவி வழங்கப்படுகிறது.[1]

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மக்களவையின் முதல் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்களிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பேரவைத் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வரை அல்லது தாமாக பதவியிலிருந்து விலகும் வரை பதவியில் இருப்பார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம்.[2] இதற்கான தீர்மானத்தில் பெரும்பான்மையில், காலியிடங்களை அகற்றிய பிறகு, மொத்த பலத்தில் 50% அல்லது 50% க்கும் அதிகமாக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மக்களவைக்குத் துணைத்தலைவர் பொறுப்பு என்பதால், மக்களவையில் உள்ள பெரும்பான்மையால் மட்டுமே இவரை நீக்கம் செய்ய முடியும். துணைத் தலைவர் பதவியிலிருந்தாலும், இவர் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்றாலும், தங்கள் கட்சியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியக் குடியரசின் நாடாளுமன்ற மரபுப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களிலிருந்து துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் மார்ச் 2021 நிலவரப்படி, குடியரசு வரலாற்றில் தனித்துவமாக, மக்களவையில் இப்பதவி காலியாக உள்ளது.[3]

பட்டியல்

[தொகு]
  • எண்: தற்போதைய வரிசை எண்
  • அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார் அல்லது இறந்தார்
  • § முந்தைய பதவிக் காலத்துக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு வந்தார்
   [[அதிமுக|]]   (1) அகமதமா (1)  பா.ஜ.க   (3)  திமுக    (1)  காங்கிரசு   (7)  சிஅத   (1)
எண். படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி Term of office[4] மக்களவை

தேர்தல்
இந்திய மக்களவைத் தலைவர் கட்சி[a]
பதவியேற்ற நாள் பதவி முடிந்த நாள் அலுவல் நாட்கள்
1 ம. அ. அய்யங்கர்

(1891–1978)
திருப்பதி 30 மே 1952 7 மார்ச் 1956 3 ஆண்டுகள், 282 நாட்கள் 1st

(1952 தேர்தல்)
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் இந்திய தேசிய காங்கிரசு
2 ஹுகம் சிங்

(1895–1983)
பதிண்டா 20 மார்ச் 1956 4 ஏப்ரல் 1957 5 ஆண்டுகள், 333 நாட்கள் ம. அ. அய்யங்கர்
17 மே 1957 31 மார்ச் 1962 வது

(1957 தேர்தல்)
3 எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்

(1902–1968)
சிமோகா 23 ஏப்ரல் 1962 3 மார்ச் 1967 4 ஆண்டுகள், 314 நாட்கள் 3rd

(1962 election)
சர்தார் ஹுகாம் சிங்
4 ஆர். கே. காதில்கர்

(1905–1979)
கெத் 28 மார்ச் 1967 1 நவம்பர் 1969 2 ஆண்டுகள், 218 நாட்கள் 4வது

(1967 தேர்தல்)
நீலம் சஞ்சீவ ரெட்டி

ஜி.எஸ். தில்லான்

5 ஜி.ஜி. ஸ்வெல்

(1923–1999)
சில்லாங் 9 திசம்பர் 1969 27 திசம்பர் 1970 6 ஆண்டுகள், 315 நாட்கள் ஜி.எஸ். தில்லான்

பாலி ராம் பகத்

அனைத்து கட்சி மலையக தலைவர்கள் மாநாடு
27 மார்ச் 1971 18 சனவரி 1977 5th

(1971 தேர்தல்)
6 கோதே முராஹரி

(1926–1982)
விஜயவாடா 1 ஏப்ரல் 1977 22 ஆகத்து 1979 2 ஆண்டுகள், 143 நாட்கள் 6th

(1977 தேர்தல்)
நீலம் சஞ்சீவ ரெட்டி

கே. எஸ். ஹெக்டே

இந்திய தேசிய காங்கிரசு
7 கோ. இலட்சுமணன்

(1924–2001)
வடசென்னை 1 திசம்பர் 1980 31 திசம்பர் 1984 4 ஆண்டுகள், 30 நாட்கள் 7வது

(1980 தேர்தல்)
பல்ராம் சாக்கர் திராவிட முன்னேற்றக் கழகம்
8 மு. தம்பிதுரை

(1947–)
தருமபுரி 22 சனவரி 1985 27 நவம்பர் 1989 4 years, 309 நாட்கள் 8வது

(1984 தேர்தல்)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
9 சிவ்ராஜ் பாட்டீல்

(1935–)
இலாத்தூர் 19 மார்ச் 1990 13 மார்ச் 1991 359 நாட்கள் 9வது

(1989 தேர்தல்)
ரபி ராய் இந்திரா காங்கிரஸ்
10 சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா

(1931–2014)
துமக்கூரு 13 ஆகத்து 1991 10 மே 1996 4 ஆண்டுகள், 271 நாட்கள் 10th

(1991 தேர்தல்)
சிவ்ராஜ் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
11 சூரஜ் பன்

(1928–2006)
அம்பாலா 12 சூலை 1996 4 திசம்பர் 1997 1 ஆண்டு, 145 நாட்கள் 11ஆவது

(1996 தேர்தல்)
பி. ஏ. சங்மா
12 பி. எம்.சையது

(1941–2005)
லட்சத்தீவு 17 திசம்பர் 1998 26 ஏப்ரல் 1999 4 ஆண்டுகள், 232 நாட்கள் 12ஆவது

(1998 தேர்தல்)
ஜி. எம். சி. பாலயோகி இந்திய தேசிய காங்கிரசு
27 அக்டோபர் 1999 6 பிப்ரவரி 2004 13ஆவது

(1999 தேர்தல்)
ஜி. எம். சி. பாலயோகி
மனோகர் ஜோஷி
13 சரண்ஜித் சிங் அத்வால்

(1937–)
பில்லூர் 9 சூன் 2004 18 மே 2009 4 ஆண்டுகள், 343 நாட்கள் 14ஆவது

(2004 தேர்தல்)
சோம்நாத் சட்டர்ஜி சிரோமணி அகாலி தளம்
14 கரிய முண்டா

(1936–)
கூந்தி 3 சூன் 2009 18 மே 2014 4 ஆண்டுகள், 349 நாட்கள் 15ஆவது

(2009 தேர்தல்)
மீரா குமார் பாரதிய ஜனதா கட்சி
(8) மு. தம்பிதுரை

(1947–)
கரூர் 13 ஆகத்து 2014[§] 25 மே 2019 4 ஆண்டுகள், 285 நாட்கள் 16ஆவது

(2014 தேர்தல்)
சுமித்ரா மகஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
காலியிடம் (23 சூன் 2019 முதல்)

புள்ளிவிவரங்கள்

[தொகு]
பதவிக்காலத்தின் அடிப்படையில் துணைப்தலைவர்களின் பட்டியல்
No. பெயர் கட்சி பதவிக் காலம்
அதிக பதவிக் காலம் மொத்தப் பதவிக் காலம்
1 மு. தம்பிதுரை அதிமுக 4 ஆண்டுகள், 309 நாட்கள் 9 ஆண்டுகள், 229 நாட்கள்
2 ஜி.ஜி. ஸ்வெல் APHLC 5 ஆண்டுகள், 297 நாட்கள் 6 ஆண்டுகள், 315 நாட்கள்
3 ஹுகம் சிங் இதேகா 4 ஆண்டுகள், 318 நாட்கள் 5 ஆண்டுகள், 333 நாட்கள்
4 கரிய முண்டா பாஜக 4 ஆண்டுகள், 349 நாட்கள் 4 ஆண்டுகள், 349 நாட்கள்
5 சரண்ஜித் சிங் அத்வால் சிஅத 4 ஆண்டுகள், 343 நாட்கள் 4 ஆண்டுகள், 343 நாட்கள்
6 எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் இதேகா 4 ஆண்டுகள், 314 நாட்கள் 4 ஆண்டுகள், 314 நாட்கள்
7 சித்தநஞ்சப்பா மல்லிகார்ஜுனையா பாஜக 4 ஆண்டுகள், 271 நாட்கள் 4 ஆண்டுகள், 271 நாட்கள்
8 பி. எம்.சையது இதேகா 4 ஆண்டுகள், 102 நாட்கள் 4 ஆண்டுகள், 232 நாட்கள்
9 கோ. இலட்சுமணன் திமுக 4 ஆண்டுகள், 30 நாட்கள் 4 ஆண்டுகள், 30 நாட்கள்
10 மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் இதேகா 3 ஆண்டுகள், 282 நாட்கள் 3 ஆண்டுகள், 282 நாட்கள்
11 ஆர்.கே. காதில்கர் இதேகா 2 ஆண்டுகள், 218 நாட்கள் 2 ஆண்டுகள், 218 நாட்கள்
12 கோதே முராஹரி இதேகா 2 ஆண்டுகள், 143 நாட்கள் 2 ஆண்டுகள், 143 நாட்கள்
13 சூரஜ் பன் பாஜக 1 ஆண்டுகள், 145 நாட்கள் 1 ஆண்டுகள், 145 நாட்கள்
14 சிவ்ராஜ் பாட்டீல் இதேகா 359 நாட்கள் 359 நாட்கள்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "J. Jayalalithaa's partyman M. Thambidurai is unanimous choice for Deputy Speaker".
  2. Parliamentary System in India.
  3. "Convention of electing the Deputy Speaker from the Opposition should be upheld". The Hindu (in ஆங்கிலம்). 14 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
  4. The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period

குறிப்புகள்

[தொகு]
  1. This column only names the deputy speaker's party. The deputy speaker may elected by coalition of several parties and independents; these are not listed here.

வெளி இணைப்புகள்

[தொகு]