மார்ச்சு 16
Appearance
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 16 (March 16) கிரிகோரியன் ஆண்டின் 75 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 76 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 290 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார்.
- 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.
- 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார்.
- 1660 – இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
- 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின.
- 1792 – சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார்.
- 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
- 1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.[1]
- 1917 – முதலாம் உலகப் போர்: செருமனியின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது.
- 1925 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
- 1935 – வெர்சாய் ஒப்பந்தத்தை மீறும் வகையில் எதிராக செருமனி மீண்டும் புதுப்படைக்கலன்கள் தயாரிப்பதில் ஈடுபட வேண்டும் என இட்லர் உத்தரவிட்டார்.
- 1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
- 1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் செருமனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
- 1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
- 1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.
- 1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.
- 1978 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோரோ கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார்.
- 1979 – சீன-வியட்நாமியப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் எல்லையைக் கடந்து சீனாவினுள் நுழைந்ததை அடுத்து, போர் முடிவுக்கு வந்தது.
- 1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் 1991 டிசம்பர் 4 இல் விடுதலை ஆனார்.
- 1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
- 1995 – மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.
- 2001 – சீனாவின் சிஜியாசுவாங் நகரில், இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 108 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.
- 2005 – இசுரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.
- 2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.
- 2014 – கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.
பிறப்புகள்
- 1693 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766)
- 1750 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848)
- 1751 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)
- 1774 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய நிலப்படவியலாளர் (இ. 1814)
- 1789 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1854)
- 1799 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேய தாவரவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1871)
- 1839 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (இ. 1907)
- 1859 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (இ. 1906)
- 1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி
- 1901 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1952)
- 1910 – இப்திகார் அலி கான் பட்டோடி, இந்திய-ஆங்கிலேய துடுப்பாளர், 8வது பட்டோடி நவாப் (இ. 1952)
- 1916 – சுடோமு யாமகுச்சி, சப்பானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2010)
- 1918 – எஸ். ஏ. நடராஜன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
- 1926 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர்
- 1927 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (இ. 1967)
- 1929 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர் (இ. 1993)
- 1929 – இரா. திருமுருகன், தமிழகத் தமிழறிஞர்
- 1940 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (இ. 2012)
- 1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், குனூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.
- 1954 – அருண் விஜயராணி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2015)
- 1959 – இயென்சு சுடோல்ட்டென்பர்க், நோர்வேயின் 47வது பிரதமர்
- 1959 – விஜயதாச ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
- 1940 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1858)
- 1963 – எம். பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி (பி. 1889)
- 1974 – கோ. சாரங்கபாணி, தமிழக ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் (பி. 1903)
- 1978 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், பெரியாரின் 2வது மனைவி (பி. 1920)
- 1989 – அழ. வள்ளியப்பா, தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞர் (பி. 1922)
- 2003 – இரேச்சல் கோரீ, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1979)
- 2008 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1949)
- 2014 – அமலெந்து டே, இந்திய வரலாற்றாசிரியர் (பி. 1929)
- 2016 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1939)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ J.A. LaNauze. The Making of the Australian Constitution. Melbourne University Press, 1972.